ஐபிஎல்-இன் முன்னாள் தலைவரான லலித் மோடி மீது முறைகேடான புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கைதில் இருந்து தப்பிப்பதற்காக 2019 வெளிநாடுக்கு தப்பிச் சென்றார். தற்போது அவர் லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக கூறுகின்றனர். இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, என் மீது எந்த வழக்கும் இல்லை, சட்ட பிரச்சனையும் இல்லை.

அப்படி இருந்தால் அதை தயவு செய்து சமர்ப்பிக்கவும். இருப்பினும் நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருதேன். ஏனென்றால், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ‘மேட்ச் பிக்ஸ்’ செய்ய சொன்னார். ஆனால் நான் அதை மறுத்தேன், விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம். இதனால் எனக்கு பல வழிகளில் இருந்து கொலை மிரட்டல்கள் வந்தது. அதனால் தான் வெளிநாட்டிற்கு சென்றேன் என்று அவர் கூறினார்.