
ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கண்டிகை என்னும் பகுதியை சேர்ந்த துளசி என்பவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகின்றார். அவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் மரப்பெட்டி ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் துளசி அதனை திறந்து பார்த்த போது ஆண் பிணம் ஒன்று இருந்தது. அதோடு ரூபாய் 1.30 கோடி பணம் கேட்டு மிரட்டல் கடிதம் ஒன்றும் அதில் இருந்தது. இது குறித்து துளசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் துளசியின் சகோதரி ரேவதி அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா ஆகியோர் கூலி தொழிலாளியை கொலை செய்து சடலத்தை அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் ரேவதி அவரது கணவர் ஸ்ரீதர் வர்மா மற்றும் சுஷ்மா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.