மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், ஆதார் பதிவு அடையாள எண் மூலம் பான் அட்டை பெற்ற நபர்கள், 2025 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தங்களின் ஒரிஜினல் ஆதார் எண்களை வருமானவரி துறை இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மூலமாக புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கே மற்றும் எப்படி புதுப்பிக்கலாம்?
ஒரிஜினல் ஆதார் எண்களை கீழ்க்கண்ட வழிகளில் சமர்ப்பிக்கலாம்:

https://www.incometax.gov.in இணையதளத்தில் PAN மற்றும் Aadhaar எண்ணை பதிவு செய்து OTP மூலம் சரிபார்ப்பு செய்ய வேண்டும் அல்லது  நேரடியாக CBDT-க்கு வழங்கலாம். இதற்கு எந்தவிதமான அபராதமும் விதிக்கப்படாது.

2025 டிசம்பர் 31 என்பது உங்கள் ஆதார் எண்ணை புதுப்பிக்க கடைசி நாள். இந்த தேதியைத் தவற விட்டால், வருமானவரி தாக்கல் செய்ய முடியாத நிலை, வங்கி பணிகள், சொத்துப் பரிமாற்றங்கள் என நிதி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படும். எனவே, ஆதார் பதிவு அடையாளம் மூலம் பான் பெற்றவர்கள் உடனடியாக உங்கள் ஒரிஜினல் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம்.