திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லி செல்லும் ரயில் வியாழக்கிழமை மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் திருவனந்தபுரத்தில் இருந்து புது தில்லிக்கு தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து பகல் 12.30 மணிக்கு புறப்படும் ரயில் திருப்பூர், சேலம், கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக புது தில்லியை சென்றடைகிறது. இந்நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த ரயில் வருகிற மார்ச் இரண்டாம் தேதி ஆக்ரா காண்ட், மிடாவலி, காசியாபாத், எத்மத்பூர் வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.