
உத்திர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் 185 வருட பழமையான மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பகுதியை அதிகாரிகள் இடித்துள்ளனர். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஃபுல்டவுசர் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது உள்ளூர் அதிகாரிகள் ஃபுல்டவுசர் நடவடிக்கையின் மேற்கொண்டு உள்ளனர். இந்த மசூதி செயற்கைக்கோள் மற்றும் மசூதியின் வரலாற்று படங்களை காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இடிப்பதற்காக அதிகாரிகளால் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதோடு ஒரு மாதம் கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. அதை பின்பற்ற அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்தனர். பண்டா பஹ்ரைச் நெடுஞ்சாலை விரிவுபடுத்த இடையூறாக இருந்த நூரி மசூதியின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ஃபுல்டவுசர் மூலம் இடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.