சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து அவிநாசி சாலை வரை திமுக கட்சி நிர்வாகி தொண்டர்கள் மேல தாளங்களுடன் அவரை வரவழைத்தனர். கோவையில் 2 நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

முதலில் சர்வதேச ஹாக்கி மைதானத்தின் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அதன் பின் கோவை சிவானந்தா காலனியில் திராவிட இயக்க தமிழர் பேரவை மாநாடு சுப வீரபாண்டியன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் கலந்து கொண்டு பேச உள்ளார்.