ராஜஸ்தானில் துணை முதல்வராக பதவி வகிப்பவர் பிரேம்சந்த் பைரவா. இவரது மகன் ஆஷூ பைரவா தனது நண்பர்களுடன் திறந்த வெளி ஜீப்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணம் செய்து ரிலீஸ் எடுத்துள்ளார். மேலும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அது மட்டும் இல்லாமல் ராஜஸ்தான் காவல்துறையினர் ஜிப்பிற்கு பின்னர் துணை முதல்வரின் மகனுக்கு பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய துணை முதல்வர், என்னுடைய மகன் பள்ளி உயர்கல்வி தான் படிக்கிறான்.

அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். எனது மகனுக்கு 18 வயது கூட ஆகவில்லை. அவர்களின் பாதுகாப்புக்காக தான் போலீஸ் வாகனம் பின்னால் சென்றது என கூறியிருந்தார். இந்த நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக போலீசார் ஆஷூ பைரவாவுக்கு ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக ரூ.5000, சீட் பெல்ட் அணியாக அணியாமல் சென்றதற்கு ரூ.1000, செல்போனில் பேசியபடி பயணம் செய்ததற்காக ரூ.1000 ரூபாயும் என 7000 ரூபாய் அபராதம் விதித்தனர்.