
உத்திர பிரதேச மாநிலத்தில் பிராக்யராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் அனைத்து இடங்களில் இருந்தும் பல கோடி பக்தர்கள் வருகின்றனர்.
இந்த மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நிலையில் கும்பமேளாவில் புனித நீராடி விட்டு பக்தர்கள் சிலர் காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற வாகனம் ஜார்கண்ட் ஹசாரிபாக் மாவட்டத்திற்கு காலை 6.30மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பைக் ஒன்று வேகமாக வந்துள்ளது. இதை கவனித்த ஓட்டுனர் பைக்கை மோதாமல் தவிர்ப்பதற்காக காரை திருப்பி உள்ளார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த அருகில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோது விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள ஷேக் பிகாரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர். புனித நீராடி விட்டு திரும்பிய பக்தர்கள் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.