
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருமலர்(38), செண்பகம்(35), திருமஞ்சு(33) ஆகிய மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து முதலமைச்சர் கூறியதாவது, இந்த சம்பவத்தை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். அதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படவும் உத்தரவிட்டுள்ளார்.