இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து 4 ஆண்டுகள் கழித்து, இவர்களின் தனிப்பட்ட காரணத்தினால் விவாகரத்து ஆகிவிட்டது. அதன் பிறகு, நாக சைதன்யாவும், நடிகை சோபிதாவும் டேட்டிங்கில் இருந்தனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் இவர்களது ஜோடி ஒன்றாக ஹங்கவுட் செய்யும் போது, சமந்தா சமூக ஊடகங்களில் உணர்ச்சிகரமான பதிவுகளை பகிர்ந்து உள்ளார். இதை பார்ப்பவர்களுக்கு இந்த பதிவு நாக சைதன்யாவுக்காக என்று அவர்கள் நினைத்துள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரை குறித்து, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜீவனாம்சம் என்பது விவாகரத்தான பிறகு கேட்பது வழக்கம். இவர்களது ஜீவனாம்சம் தொடர்பான தகவல்கள் விவாகரத்தின் போது வெளிவந்தது. அதாவது நாக சைத்தன்யா, சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுத்ததாகவும், அதை சமந்தா வாங்க மருத்துதாகவும் தகவல் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. இந்த தகவலின் உண்மைத் தன்மை எதுவும் உறுதிப்படுத்தவில்லை, இருப்பினும் சமந்தா பெருந்தன்மையுடன் மறந்துவிட்டதாக அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.