
பிரபலமான நடிகையாகவும் பாஜக கட்சியின் நிர்வாகியாகவும் இருப்பவர் குஷ்பூ சுந்தர். இவர் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பாஜகவை விமர்சித்து பேசிய வீடியோவை காங்கிரஸ் ஆதரவாளரான பால் கோஷி என்பவர் தன்னுடைய twitter-ல் வெளியிட்டுள்ளார். அதோடு குஷ்புவின் அந்த பேச்சுக்குப் பிறகு பாஜகவில் என்ன மாறிவிட்டது என்று அவர் அந்த கட்சியில் சேர்ந்தார். சில தனியார் வியாபார டீல்களுக்காக குஷ்புவின் கணவர் சுந்தர் சி-க்கு சிறை தண்டனை கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான் எங்கள் கட்சியில் சேர்ந்தால் உங்கள் கணவர் ஜெயிலுக்கு போக மாட்டார் என்று கூறி பாஜக குஷ்பூவுடன் டீலிங் பேசியதால் அவர் அந்த கட்சியில் சேர்ந்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ஒருவர் இது உண்மையா என்று கமெண்டில் கேட்க பால் கோஷி ஆமாம் உண்மைதான் என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு தற்போது குஷ்பூ பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நீங்கள் எப்படிப்பட்ட மனிதர். மனிதர் என்று அழைப்பதற்கே நீங்கள் தகுதி இல்லாதவர். உங்கள் குடும்பத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக பேரம் பேசியிருக்கலாம். ஆனால் என்னிடம் இல்லை. தேவை இல்லாமல் என் கணவரை இழுக்காதீர்கள். என்னிடம் எல்லை மீறாதீர். தேவையில்லாமல் என் குடும்பத்தை சீண்டினால் நான் அடிபட்ட பெண் புலியை போன்று மாறி விடுவேன். எனக்கு சொந்த புத்தி இல்லாத தலைவரின் கட்சியில் இருக்க விருப்பமில்லை. இனி என் கணவரை பற்றி ஒரு வார்த்தை பேசினால் அவ்வளவு தான். நான் உங்களுக்கும் உங்களைப் போன்ற லூசர்ஸ்களுக்கும் எச்சரிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
I was sitting in the audience when @khushsundar spoke this. Honestly I loved her for what she said.
Apparently, her husband was facing imprisonment due to some shady business deals. BJP settled the deal by forcing her to be theirs and in return hubby stays out of jail as long… https://t.co/9NZwVfrcm9
— Paul Koshy (@Paul_Koshy) March 4, 2023
Seriously Paul?? What kind of a human are you?? You are not even fit to be called a man. Probably in your family they bargain with women for their own safety or interests. Not mine. Dare you, or anyone, ever bring my husband into this. I am a docile person till you hit my nest. https://t.co/lcDErwKKfG
— KhushbuSundar (Modi ka Parivaar) (@khushsundar) March 5, 2023