தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். அதோடு நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். ஆனால் வாடிவாசல் படம் குறித்த அப்டேட் எதுவும் இல்லாததால் படம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக இணையதளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் தற்போது இது வெறும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் வடசென்னை 2 எப்போது வரும் என்று கேட்டார். அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தின் ரிலீஸ் தேதியே எனக்கு தெரியாது. இந்தப் படத்தைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க  இருக்கிறேன். எனவே வடசென்னை 2 எப்போது வரும் என்பது தெரியாது என்று கூறியுள்ளார். இதன் மூலம் வாடிவாசல் திரைப்படம் வெளியாவது உறுதி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது நடிகர் சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.