
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்காயம் அருகே ராணிப்பேட்டை கிராமத்தில் காயத்ரி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள அரசு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ள நிலையில் விடுமுறையை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன்பு காயத்ரி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் காயத்ரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோர்கள் காயத்ரி தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.இது குறித்து அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயத்ரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.