மகாகவி பாரதியின் பிறந்தநாள் இன்று. இந்நிலையில் அவரது பிறந்தநாளுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, இந்திய நாட்டின் சுதந்திர வேட்கைக்கு தன்னுடைய கவிதையால் உயிரூட்டியவர். அடக்குமுறைக்கு எதிரான சிந்தனைகளை தனது பாடலில் உருவாக்கியவர்.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று என்றும், பெண் அடிமை ஆதிக்கத்தையும் எதிர்த்து நின்று உள்ளார். இவர் தனது வறுமையான வாழ்க்கையின் போதும் தான் கொண்ட கொள்கை லட்சியத்தை கைவிடவில்லை. நான் சோர்வடையும் நேரத்தில் எனக்கு உற்சாகம் கொடுக்கும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியின் பிறந்தநாளை போற்றுவோம் என்று அவர் கூறியிருந்தார்.