
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவுக்குப் பிறகு மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. பள்ளியின் விளையாட்டு மைதானம் அருகிலுள்ள தோப்பில், பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள் திடீரென சண்டை போட்டுள்ளனர். ஒருவரால் மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்துக்கொண்டு மற்றொருவரை வெட்டியுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள் உடனே மாணவனை மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாணவனுக்கு வயிற்றில் 5 தையல்களும், தலையின் பின்புறம் 3 தையல்களும் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது, இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.