ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் குடியிருப்பதாவது, மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத அளவு பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

இதனால் 195 குடும்பத்தினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைத்து முடிவு எடுத்துள்ளது. அதன்படி அரிசி, கோதுமை, போன்ற தானியங்கள், பிஸ்கட், பால் பவுடர், துணி வகைகள், போர்வை, பாய் மெழுகுவர்த்தி, உள்ளாடைகள் நாப்கின்ஸ் போன்றவற்றைத் திரட்டி அனுப்பி வைக்க வேண்டி இருக்கிறது.

மேற்கண்ட பொருட்கள் அதிக அளவு வழங்கவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வாகன வசதிகளை ஏற்பாடு செய்து தரவும் நல் உள்ளங்களை வேண்டிக்கொள்கிறோம். எனவே உதவி செய்ய மனம் இருப்பவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தொலைபேசி எண்கள் 04172271766, 04172271966 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். இதே போல மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணம் இல்லா தொலைபேசி எண் 1077- ஐ தொடர்பு கொண்டு பாதிப்புகளை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.