
கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தகுதி சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்களுக்கு 82,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து புகை கட்டுப்பாட்டு சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 59 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி 4.10 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளை மீறி இயக்கப்பட்ட 261 வாகனங்களுக்கு 7.02 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாகன தணிக்கை மேற்கொண்டு விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.