
அதிமுகவினுடைய பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டமானது, அதிமுக தலைமை அலுவலகமாக இருக்கக்கூடிய எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பேசிய அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்களிடம் குறை இருந்தால் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்களிடம் நேரடியாக தெரிவிக்காமல், அதை தலைமையிடமே தெரிவிக்க வேண்டும். அதற்க்கு உங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
மாவட்ட செயலாளர் செயல்பாட்டில் மாற்றுக் கருத்து இருந்தால் தலைமைக்கு தெரியப்படுத்தலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றால் தான் நாம் எதிர்பார்ப்பதை நிறைவேற்றும் ஆட்சியானது மத்தியில் அமையும் எனவும் தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக இனி ஒருபோதும் அதிமுக கூட்டணி வைக்காது என மக்களிடம் தெளிவுபடுத்துங்கள் எனவும் தற்போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களிடம் கூறியதாக தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. பாஜகவுடன் அதிமுக ஒரு போதும் கூட்டணி வைக்காது இதனை நீங்கள் அழுத்தமாக மக்களிடம் சொல்ல வேண்டும் எனவும் பூத் கமிட்டி பொறுப்பாளரிடம் பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியிருக்கிறார்.