
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக – பாஜக கூட்டணி பிரிந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். ஏன் இதை நான் சொல்கிறேன் என்றால் ? அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் கிடையாது. ஏன் அவங்க கூட்டணி விட்டு வந்திருக்கிறார்கள் என்பதை மொத்தத்தில் நாம பார்த்தால் ?
இரண்டு கட்சிகளுக்குள் பிரச்சனை இல்லை, இரண்டு தலைவர்களுக்குள் தான் பிரச்சனை நடந்திருக்கு. இது நிரந்தரமா ? இல்லையா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதனால் இன்னும் 6, 7 மாதம் இருக்கு. பார்லிமென்ட் தேர்தலுக்கு யார் தலைமையில் ? என்ன கூட்டணி அமையப்போகிறது ? கேப்டன் சொல்வார்.இதை உடனே சொல்ல முடியாது.
கொஞ்சம் டைம் ஆகும். நிச்சயமாக ஒரு நல்ல தீர்வா தேமுதிக எடுக்கும் என்பதை இந்த நேரத்தில் சொல்கிறேன்.பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு ஏழு மாதம் இருக்கின்றது. அதனால நிச்சயமாக உரிய நேரத்தில் உரிய நேரத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்த்தினுடைய நிலைப்பாடு என்ன என்பதை கேப்டன் அவர்கள் உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
காவேரி விவகாரத்தில் இங்கயும் போராட்டம். உண்ணாவிரதம் அங்க பந்த், இங்க பத்த். இது கிடையாது. இதுக்கு தீர்வு என்ன ? நடிகர் சங்கத்திலேயே கேப்டன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். முல்லை பெரியாருக்காக தேனியில் உண்ணாவிரதம் இருந்தார். தஞ்சையில் விவசாயிகளுக்காக எத்தனையோ வாட்டி கேப்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிண்றோம். ஏதாவது தீர்வு இருக்கா ? என தெரிவித்தார்.