
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு ஜிஎஸ்டி ரோட்டிலேயே மழை தண்ணீரை அகற்ற முடியலை. மாநகராட்சி பகுதிகளுக்குள் எங்க பாத்தாலும் குளம், குட்டையா தண்ணி தேங்கி தேங்கி நிக்குது. கொசு உற்பத்தி… எங்க பாத்தாலும் டெங்கு பரவிக்கிட்டு இருக்குது. இல்லன்னு சொல்றாரு சுகாதாரத்துறை அமைச்சர்… டெங்குவே இல்லை. ஒன்று இரண்டு கேஸ் தான் வருதுன்னு சொல்றாரு. அங்கங்க மழை பெய்சு தேங்குன நீருல கொசு உற்பத்தியாகிச்சுன்னா டெங்கு வரும், மலேரியா வரும்.
பொதுமக்கள் பாதிக்கப்படுவாங்க. இதையெல்லாம் இந்த விடியா திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ரோடு போடுறாங்க… ராத்திரியோட ராத்திரியா வந்து ஒரே இன்சு போட்டுட்டு போயிருந்தாங்க. மூணு மாசம் கூட அந்த ரோடு தாங்க மாட்டேங்குது. இதெல்லாம் தாம்பரம் மாநகராட்சியில் இருக்கக்கூடிய அவலமான நிலைகள். இந்த நிலைகளை அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் கண்டன ஆர்ப்பாட்டம்.
எங்கள் மாநகராட்சி மன்றத்தினுடைய உறுப்பினர்கள் ஏற்கனவே மாநகராட்சி மன்றத்தில் பல தடவை பேசிட்டாங்க. இதெல்லாம் சரியில்ல… ரோடு சரியில்ல… பாதாள சாக்கடை திட்டம் பெயிலியர்… எல்லாம் மோசமா இருக்கு…. கழிவு நீரு, குடிநீர் கலந்து வருது. குடிக்கிறதுக்கு தண்ணி மூணு நாளைக்கு ஒரு தடவை வருது. இங்க இருக்கின்ற பத்திரிக்கை நிருபருக்கு தெரியும்.
வரி மட்டும் 30 நாளைக்கு சேர்த்து வாங்குறாங்க. எப்படி வாங்குறாங்க ? தண்ணி மூணு நாளைக்கு தான், வரி முப்பது நாளைக்கு… இதை பொதுமக்கள் சார்பாக அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஆணையை ஏற்று இன்னைக்கு அரசினுடைய… மாநகராட்சியினுடைய கவனத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நங்கள் போராட்டம் நடத்தி உள்ளோம். ஏற்கனவே சொல்லி இருக்காங்க… அவங்களுக்கு ஒன்னும் புரியல, ஏறல என தெரிவித்தார்.