
SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, ADMK ஆட்சி காலத்தில் CAA சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த யாராக இருந்தாலும்…. அவர்கள் உரிமைக்காக போராடும் பொழுது தடுக்காமல் அவர்களுக்கு அனுமதி கொடுத்த அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம். இன்றைய ஆட்சியாளர்கள் அப்படியா இருக்கிறார்கள். பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார்கள்…. பல பேர் வந்து கொண்டிருக்கிறார்கள்…. திருப்பி விடுகிறார்கள்…..
நான் வரும்பொழுது கூட அருமை சோகோதரர் வேலுமணியோடு இரண்டு பேரும் சேலத்தில் வந்து கொண்டிருந்தோம். அங்கங்க பஸ்சை நிறுத்தி உள்ளே ஏறி செக் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே இப்படிப்பட்ட ஒரு சித்திரவதையா ? எண்ணி பாருங்கள். எவ்வளவு கொடுமையான செயல் ? அவர்கள் கட்சி மாநாட்டிற்கு செல்கிறார்கள். அதிலே உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கிறது ?
இன்றைய ஆட்சியாளர்களுக்கு அதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சகித்துக் கொள்ள முடியவில்லை. ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி திருப்பி விட்டு இந்த மைதானத்திற்கு வர வேண்டிய SDPI தொண்டர்களை வேறு பகுதிக்கு திருப்பி விடுகிறார்கள். பல இடத்திலே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வாகனம் செல்ல முடியாத சூழலை பார்த்தோம். 3 கிலோ மீட்டர் வாகனம் அணி வகுத்து நின்றது. அவர்களெல்லாம் இன்னும் வந்து இருப்பார்களா ? வந்து இருக்க மாட்டார்களா என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு ஒரு இடையூறு செய்வது…. இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.