இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இருக்கின்றபோது 2018 ஆவது வருஷமும் சரி, 2020ஆவது வருஷம் சரி நான் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஆகஸ்ட் 15 கொடியேற்று விழா முடிந்த உடனே….. பருவமழை துவங்குவதற்கு முன்பாக….. வடகிழக்கு பருவமழை தூங்குவதற்கு முன்பாக…. ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு,  அந்த அதிகாரிகள் தங்களுக்கு  ஒதுக்கப்பட்ட மண்டலத்திற்கு சென்று ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு,  அங்கு இருக்கின்ற வடிகால் பகுதியில் எந்தெந்த இடத்தில் தூர்வார வேண்டும் ? எந்தெந்த இடத்தில் அடைப்பு இருக்கிறது ? என்பதை எல்லாம் கண்டறிந்து உடனுக்குடன் கால்வாயில் இருக்கின்ற தூர்கள் எல்லாம்  வா, ரி அடைப்புகள் பழுது நிக்கிய  காரணத்தினால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைவாக அப்புறப்படுத்தப்பட்டது.

அது மட்டும் இல்லாமல் மண்டலத்துக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மூலமாக எங்கெங்கு தாழ்வான பகுதிகள் இருக்கின்றதோ… அந்த தாழ்வான பகுதிகள் கன மழை பொழிகின்ற பொழுது தண்ணீர் திறக்கப்பட்டால் அதை அகற்றுவதற்கு வேகமாக துரிதமாக மின் மோட்டாரை பொருத்தி அங்கு இருக்கின்ற தண்ணீரை அப்புறப்படுத்தினோம். தயார் நிலையில் மின்மோட்டார் வைத்திருந்தோம். ஆனால் இந்த அரசாங்கம் தலைமைச் செயலாளர் பேட்டியில் சொன்னாரு. உங்க தொலைக்காட்சிகளில் தான் பார்த்தோம.  மழை பெய்து முடிந்த பிறகு தான் அந்த மழை நீரை அகற்றுவதற்கு நாங்க ராட்சச மோட்டாரை என்எல்சி நிறுவனத்திலிருந்து கேட்டு இருக்கணும்னு சொல்றாரு. அப்படினா எந்த அளவிற்கு இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது என்பது நிரூபணம் ஆகிறது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவிக்கின்ற கருத்தின் அடிப்படையில் கனமழை பொழியும் என்று தெரிந்தும் கூட…  இந்த அரசு எச்சரிக்கையோடு தேங்கிய நீரை அப்புறப்படுத்துவதற்கு தேவையான ராட்சச மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருந்தால் குறுகிய காலத்திலேயே தேங்கிய நீரை வெளியேற்றி இருக்கலாம். அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள். அதோடு 2015, 2018, 2020 எல்லாம் நீங்க பாத்தீங்கன்னா மின்சாரம் ஒரு நாள்…  ரெண்டு நாளில்  கொடுத்தோம். துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை உடனே கொடுத்தோம்.

அண்ணா திமுக அரசாங்கம் இருக்கின்றபோது பூமிக்கு அடியில் மின்சார கேபிள் பத்திச்சு இருந்தும் கூட 4  நாள் மின்சாரம் இல்லை. நேற்றைய வரைக்கும் கூட இன்னும் சில இடத்தில மின்சாரம் கிடைக்கல. இன்னைக்கும் 90% என சொல்றாங்க. ஆனால் எவ்வளவு என தெரியாது. இன்னும் உங்களுடைய பத்திரிகையில்  200 இடங்களுக்கும் மேல இன்னும் தண்ணீர் தேங்கி இருக்கு அப்புறப்படுத்தவில்லை என்று செய்தி தெரிவிக்கின்றன.youtube ல வந்துட்டு இருக்குது.  இந்த அரசினுடைய அலட்சியம் காரணமாகத்தான் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆகவே இனியாவது இந்த அரசாங்கம் தேங்கியநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.