நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று கூறியது. இதனால் அரசு ஊழியர்களின் ஆதரவை பெற்று, திமுக ஆட்சியைப் பிடித்தது. ஆட்சிக்கு வந்த உடனே, இந்த திட்டத்தை அறிவிக்கும் என்று ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெறும் நாளில், இந்த திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று சட்டசபையில் அறிவித்தது.

இப்படி நம்ப வைத்து கழுத்தை அறுப்பது தான் திமுகவின் திராவிடம் மாடல் ஆட்சி. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது போல் நடித்து, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி அரசு ஊழியர்களுக்கு செய்யும் பச்சை துரோகம் ஆகும். எனவே திமுக அரசு இதற்கு மேல் அவர்களது வயிற்றில் அடிக்க கூடாது. தங்களின் உழைப்புக்கான உரிமைக்காக 20 ஆண்டுகள் போராடிவரும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் அதில் கூறிருந்தார்.