பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது,  திமுக தன்னுடைய காழ்ப்புணர்ச்சியில் அரசுக்கு வந்த பிறகும் கூட,  கட்சியினுடைய கொள்கையை அரசுகுள்ளேயும் திணிக்கிறாங்க. இது ரொம்ப வருத்தத்தக்க ஒரு செயல். திமுக பார்த்தீர்கள் என்றால் ? இடியாப்பம் சிக்கல்ல இன்னைக்கு நிக்குத்து. நீட்டை வைத்து அரசியல் பண்ணி, இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டாங்க. திமுகவினுடைய உண்ணாவிரத போராட்டத்திற்கு சாமானிய பொதுமக்கள் போகல.

ஒரு ஆளுங்கட்சி…  ஆளுகின்ற எல்லா மாவட்டத்திலும் போராட்டம் நடத்தி இருந்தால் ஸ்தம்பித்து போய் இருக்கணும். எங்கேயுமே இல்லை. பொதுமக்கள்  யாருமே கலந்து கொள்ளவில்லை.  உதயநிதி ஸ்டாலின் சொல்றாங்க…  ஆளுநர் பதவியை துறந்து விட்டு ஆர் என் ரவி அவர்கள்,  எங்களோடு தேர்தலில் போட்டியிடனும்.இப்ப நான் சொன்னா அது நல்லா இருக்குமான்னு பாருங்க…

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு,  யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் பாஸ் பண்ணட்டும். நான் அரசியல் விட்டே போயிடறேன். அண்ணாமலை அரசியல் விட்டு போயிடுறேன். எம்எல்ஏ பதவியை துறந்து விட்டு உதயநிதி ஸ்டாலின் ஒரு சாதாரண TNPSC  எக்ஸாம் பாஸ் பண்ணட்டும் அல்லது சிவில் சர்வீஸ் எக்ஸாம். ஏன் குரூப் 4 ? பாஸ் பண்ணட்டும். ஆனா ஃபிக்ஸ் எதுவும் பண்ண கூடாது. டிஎன்பிஎஸ்சி என்கிட்ட இருக்குன்னு சொல்லிட்டு,  பிக்ஸிங் பண்ண கூடாது என தெரிவித்தார்.