
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, நீங்க எல்லாம் பத்திரிக்கை ஊடகங்கள் இருக்கீங்க. அமைச்சர்களை பார்த்து நீங்க கேள்வி கேட்க வேண்டாமா ? வெறும் அரசாங்க திட்டத்தை தொடங்கி வச்சிட்டு அதுல பேர் வாங்கிட்டு மட்டும் போனா போதுமா ? இந்த அரசாங்கம் என்ன செஞ்சிருக்கு? இது செஞ்சிருக்கு என்று வாயிலே அல்வா கிண்டிட்டு… வாயிலேயே நம்ம சீனி சக்கர சித்தப்பா, எழுத்துல எழுதி நக்கப்பா… அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆரப்பாளையத்தில் தடுப்பணை இருக்குனா ? அது நாங்க தான். ஏழு பிரிட்ஜ் தடுப்பணை கொடிமங்கலம் தடுப்பணை நாங்க தான். எல்லாமே நாங்க தான் செஞ்சோம். தெப்ப குளத்தை நிறைத்தது நாங்க தான்… இப்ப இவுங்க வந்து ஏதாச்சும் ஒன்னு செஞ்சி இருக்காங்களா ? சொல்ல சொல்லுங்க.. நீங்க கேளுங்க… தீபாவளி நேரத்துல கேளுங்கப்பா….
மக்களுக்கு தீபாவளி பரிசா எதாச்சும் சொல்லுங்க….கேளுங்கப்பா…. ஒன்னும் கேட்கவே மாட்றீங்க…. மதுரைகார பிரஸ் என்றால் பயப்பட வேண்டாமா ? ஆளுங்கட்சி இருந்தாலும், அமைச்சரா இருந்தாலும் வில்லங்கமா கேக்குறாங்கப்பா…. அவங்க கிட்ட தப்பிக்க முடியாது அப்படின்னு கேட்கணும் இல்ல என தெரிவித்தார்.