
சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25 ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இந்த முப்பது நாட்களுக்குள் குடிநீர் வரியினை செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த ஊக்கத்தொகை மூலம் ரூபாய் 1500 வரை பெறலாம். மேலும் வரி செலுத்துவதற்கு வசதியான முறையில் அனைத்து அலுவலகங்களிலும் குடிநீர் வாரிய மையங்களிலும் கட்டலாம்.
சனிக்கிழமைகளிலும் குடிநீர் வரியினை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பகுதியில் உள்ள மையங்களிலும் வாடிக்கையாளர்கள் தங்களது வரியினை காசோலையாகவோ அல்லது வரையொலையாகவோ கட்டுவதற்கு ஏதுவாக பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login> என்ற இணையதள பக்கத்திலும் கிரெடிட் கார்டு,டெபிட் கார்டு முறையில் அல்லது கியூ ஆர் கோடு, யு பி ஐ மூலமும் குடிநீர் வரியை கட்டலாம் என சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது.