
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே உள்ள பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தரண்யா ஸ்ரீ(19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இவருக்கு செல்போன் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது தாயார் விஜயலட்சுமி கண்டிப்பதும் உண்டு. இந்நிலையில் சம்பவத்தன்று தரண்யா ஸ்ரீ செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தரண்யா ஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.