
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் சுமார் 92 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார். இந்த பட்டியலில் நடிகர் விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் சுமார் 80 கோடி ரூபாய் வருமான வரியாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு 75 கோடி வருமான வரி செலுத்தி பட்டியலில் மூன்றாம் இடத்தில் நடிகர் சல்மான் கானும், நடிகர் அமிதாபச்சன் 71 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி பட்டியலில் நான்காம் இடத்திலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 66 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தி ஐந்தாம் இடத்திலும் இருக்கிறார்கள்.
அதன் பிறகு ஹிந்தி திரையுலக பிரபலங்களான அஜய் தேவகன் 42 கோடி ரூபாயும், ரன்பீர் கபூர் 36 கோடி ரூபாயும், ஹிருத்திக் ரோஷன் 28 கோடி ரூபாயும், கபில் ஷர்மா 26 கோடி ரூபாயும், கரீனா கபூர் 20 கோடி ரூபாயும், சாகித் கபூர் 14 கோடி ரூபாயும் வருமான வரி செலுத்தியுள்ளனர். இதேபோன்று தென்னிந்திய நடிகர்களான மோகன்லால் மற்றும் அல்லு அர்ஜுன் ஆகியோர் தலா 14 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளனர். மேலும் நடிகை கியாரா அத்வானி 12 கோடி ரூபாயும், கத்ரினா கைப் 11 கோடி ரூபாயும், பங்கஜ் திரிபாதி 11 கோடி ரூபாயும் வரி செலுத்தியுள்ளனர். கடந்த நிதி ஆண்டில் மட்டும் நடிகர் அமீர்கான் சுமார் 10 கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.