தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி ஆகிய 3 திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயின் ஆக நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.