
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வாத்தி திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்க, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், நடிகர் சந்திப் கிஷன், ஜான் கொக்கேன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது படக்குழு டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் மாதம் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனவும், ஜூலை மாதம் டீசர் வீடியோ வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Killer killer ! pic.twitter.com/fnihXtuKQZ
— Dhanush (@dhanushkraja) May 10, 2023