ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் மிகப்பெரிய 2 வது வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த வைரமானது கனடா நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரத்தின் தன்மையானது 2492 காரட் ஆகும்.

இதையடுத்து தென் ஆப்பிரிக்காவில் 1905 ஆம் ஆண்டு 3106 காரட் கலினன் வைரத்திற்கு அடுத்தபடியாக இந்த வைரக்கல் பெரியதாகும். கலினன் வைரத்தின் மதிப்பு இந்திய ரூபாயிக்கு சுமார் 3350 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டது. அதேபோன்று  தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரக் கல்லுக்கு பல கோடி மதிப்பு இருக்கலாம் எனவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளார்கள்.