
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா கலெக்டர் வித்தியாசமான உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளார். துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்றால் 10 மரத்தை நட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, விண்ணப்பதாரர்கள் மாவட்டத்திற்குள் தனியார் நிலத்திலோ அல்லது பொது நிலத்திலோ 10 மரங்களை நட வேண்டும். விண்ணப்பத்தை தோட்டத்திற்கான புவி குறியிடப்பட்ட சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். ஆயுத உரிமைகளை பெறுவதற்கு முன்னர் இருந்த அனைத்து நிபந்தங்களுடன் கூடுதலாக இதுவும் பொருந்தும். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வேலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு தங்கள் பங்களிப்பை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.
இது மரங்களை பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்காண பொறுப்பு விண்ணப்பதாரர்களிடமே உள்ளது. நடப்பட்ட மரக்கன்றுகளின் உயர்வாழ்வை உறுதி செய்வதற்கு பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இது ஒரு முக்கியமான பணி ஆகும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் இந்த உத்தரவு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.