
இன்றைய காலத்தில் ஆதார் என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த ஆதார் அட்டையில் குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் அடையாள அட்டையாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அட்டை வங்கிகள் முதல் ரேஷன் கார்டு வரை அனைத்து ஆவணங்களிலும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆதார் அட்டையில் பெயர், படம், முகவரி போன்ற விவரங்களை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ UIDAI பல சேவைகளை வழங்கி வருகிறது. ஒரு மொபைல் எண்ணில் எத்தனை ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். எத்தனை ஆதார் கார்டுகளையும் ஒரே மொபைல் எண்ணில் இணைக்க முடியும். அதாவது ஒரே மொபைல் எண்ணுடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.