செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி, குண்டர் சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அரசுக்கு என்ன பிரச்சனை ? போராட்டம் நடத்தியவர்களை ஏன் கைது செய்கிறீர்கள் ? அப்படி என்ன பயப்படுகிறீர்கள் ? வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினால்,  உங்களுக்கு என்ன பிரச்சனை ?  எங்கள் கருத்தை நாங்கள் சொல்லுகிறோம்…  மெரினாவில் கிரிக்கெட்டை மேட்சிக்கு ஸ்கிறீன் போட்டு நடத்துகிறீர்கள்….  போராட்டம் நடத்துவதற்கு உரிமை இல்லையா ?

மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என்று நிறுத்தி வச்சி இருக்கு அதிமுக அரசு.  நீங்கள் ஆட்சிக்கு வந்து என்ன செய்தீர்கள் ? அதை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு , கிரிக்கெட் மேட்சிக்கு அனுமதி கொடுக்குறீங்க.  மவுண்ட் ரோட்டில்…. அண்ணா சாலையில்… ஒரு காலத்தில் போராட்டம் நடத்தி,  ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி இருக்கிறது. இன்றைக்கு சாக்கடை ஓரத்தில் தான் ஊர்வலத்திற்கு அனுமதி தருகிறீர்கள்….  ஆனால் அதே  எல்ஐசி வாசலில்…  மவுண்ட் ரோட்டில் ஞாயிற்றுக்கிழமை கேளிக்கை விளையாட்டு நடக்கிறது… கொண்டாட்டங்கள் நடக்கிறது….  பெசன்ட் நகர் பீச்சில் கொண்டாட்டம் நடக்கிறது…..

மெரினா பீச்சில் கிரிக்கெட் நடக்குது… என்ன பண்ண சொல்கிறீர்கள் ? போராட்டம் என்பது ஜனநாயக உரிமை…. அதை எதோ சமூக விரோதம் போல காட்டுவதும்…. கேளிக்கையும்,  தனியார்  நிகழ்ச்சியெல்லாம் கொண்டுவந்து எல்ஐசி மவுண்ட் ரோடில்  நடத்துவது…. பெஷன்ட்  நகர் பீச்சில் நடத்துவது… மெரினாவில் ஸ்கிறீன்  போட்டு நடத்துவதெல்லாம் அரசாங்கத்தில் வேலையா இது ?  அரசாங்கம் இதற்கு தான் இருக்கிறதாத்தா ? கிரிக்கெட் விளையாட்டை  மெரினாவில் போட்டு காட்டுவது அரசாங்கத்தின் வேலையா ?

1938இல்மெரினா கடற்கரையில் தந்தை பெரியார் அவர்கள் லட்சக்கணக்கானவர்களை திரட்டி….  தமிழ்நாடு தமிழருக்கு என்ற முழங்கிய இடம் அது….வெள்ளைக்காரன் போராட்டம் நடந்தத அனுமதித்த இடம்… இத்தனை அரசியல்  போராட்டம் கண்ட இடத்தில்…இன்னைக்கு  கிரிக்கெட்டு மேட்ச் நடத்துவதற்கு எல்லா அனுமதியும் இருக்கிறது.  ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறோம்,  அதற்கு அனுமதி கொடுப்பீர்களா ? ஒன்றை மாதத்திற்கு முன்பு இந்த ஸ்டாலின் அரசு,  இந்த திமுக அரசு மணிபூரில் பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு, சீரழித்ததை கண்டித்து மெரினா அருகிலே கூடுவதற்காக வழக்கு போட்டீர்கள்… ஏன் போட்டீர்கள் ?

ஆனால் இன்றைக்கு அங்கு கிரிக்கெட் மேட்ச் நடத்துகிறீர்களே….. இது என்ன சட்டம் ?  என்ன ஜனநாயகம் உங்ககிட்ட இருக்கிறது, ஒன்றும் கிடையாது. உங்களுக்கு நல்லா  ஜால்ரா அடிக்கக் கூடியவர்களை வைத்துக் கொண்டு ஆட்சி கொண்டு போக முடியாது. அப்படியெல்லாம் வைத்து நடத்த முடியாது. மக்கள் போராட்டங்களை செவி கொடுக்க கூடிய அரசை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் விரும்பினோம். அந்த அடிப்படையிலே பல போராட்ட அமைப்புகள்,  உங்கள் கட்சியை ஆதரித்து… உங்களுக்காக தேர்தலில் உழைத்தார்கள்…  நாங்கள் அதிமுகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டோம்.

அதிமுக பாஜகவினுடைய கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால் தொடர்ச்சியாக நாங்கள் எதிர்த்தோம். பாஜகவில் பிடியில் இருக்க கூடிய அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்று  போராட்டம் நடத்தி,  வீழ்த்தினோம்.  அதற்கு மாற்றாக திமுக அரசு,  மாற்று அரசியலை….ஜனநாயக அரசியலை முன் வைக்காமல்,  லாப நோக்கத்திற்கு  செயல்படக்கூடிய முதலாளிக்கு சாதகமாக இருப்பது…. விவசாயிக்கு எதிராக இருப்பது …இது போன்ற நிகழ்வுகளை செய்து கொண்டே  இருந்தீர்கள் என்றால் ,  அதிமுக அரசுக்கும், உங்களுக்கு என்ன வித்தியாசம் என்று தான் கேள்வி கேட்க வேண்டி உள்ளது.