
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 38 வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியது. இந்த விளையாட்டுப் போட்டி ஜனவரி 28 முதல் பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறும். இதனை தொடங்கிய பிரதமர் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கூறியதாவது, சுற்றுச்சூழல் மாற்றம் உடற்பயிற்சியின்மை, அவசர உணவு பழக்கவழக்கங்களால் நமது நாட்டில் உடல் பருமன் நோய் அதிகரித்து வருகிறது. உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணியாக இருப்பது அதிகமான சமையல் எண்ணெயை பயன்படுத்துவதாகும்.
முதியவர்கள் மட்டுமல்லாமல் இளைஞர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். சிறுவயதிலேயே உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். அன்றாட உணவில் சமையல் எண்ணெயை பயன்படுத்துவதை குறைத்து கடுகு எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்த இந்திய தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் ஊட்டச்சத்து நிறுவனம் அறிவுரை வழங்கியுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் 2 லிட்டர் எண்ணெயின் பயன்பாட்டை குறைந்தது 10% குறைத்து பயன்படுத்துவது இதய நோய், உடல் பருமன், நீரழிவு போன்ற நோய் காரணிகளிடமிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். தினம்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், சமச்சீரான மற்றும் அனைத்து சத்துக்களும் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.