
ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்குவதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஒரு கோடி ரூபாய் சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் ஒரு பிரபலமான தொழிற்சாலை உள்ளது. அதன் பெயர் SARRIS சாக்லேட். இந்த தொழிற்சாலையில் சாக்லேட் உடன் விதவிதமான ஐஸ்கிரீம்களும் தயாரிக்கின்றனர்.
இவர்கள் நாம் உபயோகிக்கின்ற சோப்பு, சீப்பு போன்ற பல்வேறு வடிவங்களில் சாக்லேட்களை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அத்துடன் அவர்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க மற்றும் தொழிலை பெருக்க அவ்வபோது ஏதாவது செய்வது உண்டு. அந்த வகையில் தற்போது 1180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம் உள்ள, 3 அடி அகலம் கொண்ட சாக்லேட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாக்லேட்டை 3 மாதத்தில் 8 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது.