
இந்திய ரயில்வே துறையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது. இதில் 8113 பணியிடங்கள் நிரப்ப உள்ளன. ரயில்வே துறையில் நிரப்ப உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பதவிகள் பின்வருமாறு,
1. Chief Commercial cum Ticket Supervisor-1736
2. Station Master-994
3. Goods Train Manager-3144
4. Junior Account Assistant cum Typist- 1507
5. Senior Clerk cum Typist-732
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை பின்வருமாறு,
1. www.rrbchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
2. www.indianrailways.gov.in மேலும் விவரங்கள் அறிய இந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
3. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபர் 13 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
4. வயதுவரம்பு 18ல் இருந்து 33 க்குள் இருக்க வேண்டும்.
5. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பிரிவில் ஏதாவது ஒரு துறையில் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் தட்டச்சு பயின்று இருக்க வேண்டும்.
6. பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் ரூபாய் 500 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.sc/st/PWBD பிரிவினர் ரூபாய் 250 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
7. .sc/st/PWBD மற்றும் OBC பிரிவினருக்கும் ரயில்வே துறையின் விதிமுறைகள் படி வயது வரம்பு தளர்வு படுத்தப்பட்டுள்ளது.
8. இரண்டு கட்ட எழுத்துத் தேர்வு, கணினியில் பணி புரியும் திறன், தட்டச்சு திறன், சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை போன்ற பல்வேறு படிநிலைகள் மூலம் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
9. எழுத்துத் தேர்வுக்கு உரிய ஹால் டிக்கெட் இணையதளத்தில் வழங்கப்படும். மேலும் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவருக்கு இரண்டாம் நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
10. இந்த எழுத்து தேர்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்ந்தெடுத்து தேர்வுகளை எழுதலாம்.