
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சனாதனம் என்றால் என்ன ? என ஒரு வரையறைக்கு வரணும். வர்ணாஸ்ரம தர்மம் வேற சனாதனம் வேறு என்கிறார். அதுல என்ன வேறுபாடு இருக்கிறது? பிறப்பின் அடிப்படையில்… மானுடல் பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்க்கின்ற முறைக்கு பெயர் தான் சனாதனம், வர்ணாஸ்ரம கோட்பாடு.
தலையில பிறந்தவன்… நெத்தியில பிறந்தவன்.. தோலில் பிறந்தவன்… தொடையில் பிறந்தவன்… கால்ல பிறந்தவன்…. எவனாவது ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருக்கானா ? சொல்லுங்க… இந்த நூற்றாண்டில்….. இந்த அறிவியல்… விஞ்ஞான வளர்ச்சி உலகத்தில் இந்த கோட்பாடு எல்லாம் நம்பிட்டு அலையனும்னா எப்படி ? என்ன கோட்பாடு இது.
யாராவது ஒருத்தங்க சொல்லுங்க ? நான் தாழ்ந்தவன் என்று சொல்ல நீங்க யாரு ? யாராவது சொல்லுங்க…. இங்க ஆதிக்க சாதி என எதுவும் இல்லை. சாதி என எதுவும் இல்லை. அண்ணன் அம்பேத்கர் கோட்பாடுக்கு தான் தான் நீங்க வரணும். எனக்கு யாரும் அடிமை இல்லை. நானும் யாருக்கும் அடிமை இல்லை. அதேதான் ஐயா பெரியாரும் சொல்கிறார்.
நான் உயர்ந்த சாதி என்று எண்ணிக் கொள்கிற பெருமக்கள், உங்களுக்கு கீழே தாழ்ந்த சாதி எவனும் இல்லைன்னு எண்ணிட்டிங்கன்னா… சமூகத்துல பிரச்சனை இல்லை. இருக்குன்னு சொல்லும்போது, பிரச்சனை வருது இல்ல. நீ, யாரு? யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னு தான். ஆக மொத்தம், நீயும், நானும் பத்து மாசம் தான். இதத்தான் என்னுடைய வேதம் சொல்லுது. பிறப்பு ஒப்பும் எல்லா உயிர்க்கும்.
திரும்பத் திரும்ப வந்து நீ உயர்ந்தவன், தாழ்ந்தவன்னா, டேய் இந்த நாட்டில்… உலகத்துல… உயர்ந்தவன்னு ஒருத்தன் இருக்கான். நான் சொல்றேன். உழுது, விதைத்து, விளைய வைத்து, வெம்பாடு பட்டு, அறுவடை செஞ்சு, உலகத்துக்கு சோறு கொடுக்கிற உழவர் குடி தான் உலகத்திலேயே உயர்ந்த குடி. இதற்கு பதில் இருக்கா? எல்லாருக்கும் எல்லாம் இருக்கா? நீங்க எல்லாத்தையும் எதிர்க்கணும்னா? நான் என்ன மன நோயாளியா? என தெரிவித்தார்.