நியூயார்க் நகரத்தில் முன்னாள் குழந்தைகள் நல மருத்துவர் ஸ்டூவர்ட் காப்பர்மேன்(89) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல ஆண்டுகளாக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் 100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்கும் விதமாக அமெரிக்கா நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது முன்னாள் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்த காப்பர் மேன் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இவர் மீது கடந்த 1980 லிருந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருந்த நிலையில் கடந்த 2000 ம்  ஆண்டு இவரது மருத்துவ ஒப்பந்த உரிமை கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மீது நீதிமன்றம் முழுமையாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையால் பெண்கள் நாங்கள் உண்மையை கூறுகிறோம் என்று முன்வந்துள்ளனர்.

அதன்படி அவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 63 வயதாகும் டெப்பி ரோட்ஸ் என்பவர் தான் 7 வயதில் இவரால் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறினார். மற்றொருவர் நீதிமன்றம் “நான் உங்களை நம்புகிறேன்” என்று சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு நிஜமான மருந்து என்று கூறினார். தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் காப்பர் மேனுக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு தொகையாக $1.6 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ13000 கோடி) வழங்கும் படி உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் இழப்பீடு தொகையானது அமெரிக்காவின் பாலியல் குற்ற வழக்குகளில் ஒரே நபருக்கு எதிராக வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது. மேலும் காப்பர்மேன் சொத்துக்கள் குறித்த தகவல் என்னும் வெளிவராததால் இழப்பீடு கிடைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கலாம் என்று கூறப்படுகிறது.