பீகாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக பல்வேறு கட்டமைப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ஷெரீப் நகரில் கான்கிரீட் மணிக்கூண்டு ஒன்று சுமார் 40 லட்சம் ரூபாய்க்கு கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் அம்மாநிலத்தின் முதல் மந்திரி நிதிஷ்குமார் அங்கு சென்று அதனை திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த மணி கூண்டில் கடிகாரம் செயல்படாமல் இருந்தது. இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்த பதிவுக்கு தலைப்பாக “ஒரு நாள் கூத்துக்கு ரூ.45 லட்சம் செலவு.!” என இருந்தது. இந்நிலையில் இந்த மணிபூண்டு செயல்படாமல் போனதற்கு திட்ட இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அதாவது அன்று நள்ளிரவில் மணிக்கூண்டுக்குள் மர்ம ஆசாமிகள் புகுந்து கேபிள் உள்ளிட்ட பொருள்களை திருடி சென்றனர். இதனை கட்டுவதற்கான செலவு இன்னும் கணக்கிடப்படவில்லை என்றும் கூறினார். இதையடுத்து பயனர்கள் “திறந்த ஒரே நாளில் திருட்டு நடந்து விட்டதா? காதில் பூ சுத்துகிறார்களா?” என வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.