மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக தஹவூர் ராணா கருதப்படுகிறார். தற்போது இவர் அமெரிக்காவில் இருக்கும் நிலையில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது அந்த மனுவில் இந்தியாவிற்கு தான் நாடு கடத்தப்பட்டால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன்  மற்றும் முஸ்லிம் என்பதால் சித்திரவதைக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறியிருந்தார்.

அதோடு இந்தியாவில் விசாரணை செய்ய நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் தான் டார்ச்சர் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாடு கடத்த தடை விதிக்க வேண்டுமென்று அவர் தன் மனுவில் கூறி இருந்தார். அதோடு தனக்கு வயிற்றுப் பகுதியில் கோளாறு மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பிரச்சினைகள் இருப்பதாகவும், அந்த மனுவில் கூறியிருந்தார். ஆனால்இவரின் மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட இருக்கிறார்.