புனேயில், தனியார் பள்ளியில் கணினி பாடத்தின் போது சட்டையை டக்கிங் செய்யாததால், 11 வயது மாணவனை தாக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 27 அன்று நடந்த இந்த சம்பவத்தில் சிறுவனுக்கு தலை மற்றும் கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்ததையடுத்து, தாக்குதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டது. சிறுவனின் காயங்கள் அடங்கிய வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.