மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான எம்.எச் ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். அதில் அவர் தன் கட்சியின் கொள்கைகளை அறிவித்தார். பெரியார், அண்ணா அம்பேத்கர், காமராஜ் உள்ளிட்ட தலைவர்களை அரசியல் வழிகாட்டியாக ஏற்றுள்ளார். வேலு நாச்சியாரின் வெட்டுருவை வைத்த விஜய் அவருக்கு துணையாக நின்ற ஹைதர் அலி திப்பு சுல்தானின் பெயர்களை உச்சரிக்க தவறியது ஏன்?. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு ஆகியவை வரவேற்கத்தக்கது என்றாலும் அது பாசிசத்தை எதிர்த்து களத்தில் நிற்கும் திமுகவை விமர்சிப்பது போன்றதாகும்.

திராவிடம் மாடல் ஆட்சியை வெளிப்படையாக விமர்சித்த அவர், பாஜக ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்?, பாஜக முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் வக்பு திருத்தச் சட்டம் செயல்பட்டது. அதனை எதிர்த்து அவர் ஓர் அறிக்கையாவது வெளியிட்டுள்ளாரா?. அதேபோன்று மணிப்பூரில் தொடர்ந்து நடந்து வரும் கிறிஸ்துவ இனப்படுகொலைகளை எதிர்த்து குரல் கொடுத்தாரா?. வெற்றிகரமான நடிகராக இருந்தால் அரசியலில் இடம் பிடித்து விடலாம் என்பது தமிழகத்தின் மூடநம்பிக்கையாக உள்ளது. இதற்கு முதன்மை காரணம் எம்ஜிஆர் தான் அவர் கட்சியை தொடங்கி ஆட்சியைப் பிடித்ததே இதற்கு காரணம்.