லக்கிம்பூர் கெரியில், ஒரு இளைஞனின் அப்பாவிச் செயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. அந்த இளைஞர் தற்செயலாக ஒரு காவல்துறை அதிகாரியின் சீருடையை உரசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த அதிகாரியும், அவருடன் வந்த மற்ற அதிகாரியும், அந்த இளைஞனை பொதுவெளியில் தாக்கினர்.

இந்த சம்பவத்தை சுற்றி நின்று kமக்கள் வேடிக்கை பார்த்தனர். இவ்வாறு இரக்கமில்லாமல் காவல் அதிகாரிகள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதோடு சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் அந்த இளைஞரை உடல் ரீதியாக தாக்கியதாக குற்றம் சாட்டினர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.