
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் சில மதங்களுக்கு முன்பு ஆட்சியராக டீனா டாபி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்று சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவி சோனு கன்வர் என்பவர் ராஜஸ்தானின் பாரம்பரிய உடை அணிந்து வந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டரை ஆங்கிலத்தில் வரவேற்று பேசி உள்ளார்.
அவர் பேசும்போது இந்த நாளின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ஒரு பெண்ணாக ஆட்சியர் டீனா அவர்களை வரவேற்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாக கூறியுள்ளார். அவரது ஆங்கில திறமையை கண்டு ஆட்சியர் டீனாவும், கூட்டத்தில் இருந்த அனைவரும் திகைத்து ஆச்சரியத்தில் பார்த்தனர்.