கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பூதப்பாண்டி பகுதியில் இறச்சகுளம் அருள்ஞானபுரம் கிராமத்தில் அஜிஷ்குமார் வசித்து வருகிறார். இவருக்கு ராஜசாந்தி என்ற மனைவி உள்ளார். அஜிஷ் குமார்-ராஜசாந்தி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜசாந்தி நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு அஜிஷ்குமார், ராஜசாந்தி இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதில் அஜிஷ்குமார் ராஜசாந்தியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் ஜாமினில் வெளிவந்த அஜிஷ்குமார் தனது மனைவி ராஜசாந்தியை பிரிந்து வாழ்ந்துள்ளார்.  சம்பவ நாளன்று ராஜசாந்தியின் வீட்டிற்கு சென்று “கோர்ட்டில் எனக்கு எதிராக சாட்சி கூறினால் உன்னை கொன்று விடுவேன்” என மிரட்டி உள்ளார். மேலும் கம்பால் ராஜ சாந்தியை அடித்துள்ளார். இதனால் காயமடைந்த ராஜ சாந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜிஷ்குமாரை கைது செய்துள்ளனர்.