
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது அதிகரித்துவிட்டது. தற்போது அனைவரிடமும் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பெரிய கடைகள் முதல் சிறிய வணிக நிறுவனங்கள் வரை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமாக இருப்பதால் அதனை பலரும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக யுபிஐ செயலியில் அடிக்கடி புதுப்புது அப்டேட்டுகளும் வருகிறது. அந்த வகையில் தற்போது யுபிஐ சேவையில் குரல்வழி பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி இனி பண பரிவர்த்தனை செய்வதற்கு வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண் தட்டச்சு செய்ய சேவை இல்லை. அதற்கு பதிலாக வாய்ஸ் கொடுத்தாலே போதும். இந்நிலையில் மும்பையில் நேற்று நடைபெற்ற சர்வதேச பின்டெக் விழாவில் NPCI, IRCTC, கோரோவர் ஆகிய தளங்கள் மட்டும் இந்த வசதியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. மேலும் இதே போன்ற யுபிஐ செயலியை பயன்படுத்தி ஏடிஎம் கார்டு இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்யும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.