அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவில் மூட நம்பிக்கை கருத்துகளைப் பேசிய நபர் – க்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் , ஆசிரியரையும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியையும் விமர்சித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற செயல்கள் அரசுப் பள்ளிகளை மூட நம்பிக்கை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற முயலுவதாகவே பார்க்கப்படுகிறது.

ஒரு மாணவனின் சிந்தனையை வடிவமைக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. அந்தப் பொறுப்பை உணர்ந்து செயல்படும் ஆசிரியரை விமர்சிப்பது என்பது கல்வி முறையையே கேள்விக்குறியாக்குவதாகும். மேலும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா என்ற கேள்வியை எழுப்பியிருப்பது, கல்வித்துறை நிர்வாகத்தையே அவமதிக்கும் செயலாகும்.

இது போன்ற மூட நம்பிக்கைப் பேச்சாளர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் அபாயம் உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை கெடுக்கும் இது போன்ற செயல்களை அரசு கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.