
செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதந்திரம் வாங்கின காலத்தில் இருந்து நாம் இந்தியா இந்தியா என்று சொல்லியே… நம்முடைய ரத்தத்திலே இந்தியா என்ற வார்த்தை ஊறிடுச்சு. இப்போ இந்தியா – பாகிஸ்தானுக்கு ஒரு கிரிக்கெட் போட்டி என்றாலே ? ஒட்டுமொத்த இந்தியர்களும் நாம ஒன்னு கூடுறோம். அப்படி இருக்கும்போது புதுசா இப்போ பாரத் அப்படின்னு வைக்கிறதால… எத்தன பேரு மைண்ட்ல அது ஏறும் என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு குழந்தைக்கு ரெண்டு வருஷம் ஒரு பெயரை வைத்துவிட்டு, ஏதோ ஒரு காரணத்துக்காக இன்னொரு பேரை வச்சு மாத்தி கூப்பிடுங்க அந்த குழந்தையை கூப்பிட்டு பாருங்க, அது திரும்பி கூட பார்க்காது. அதுதான் உண்மை, எதார்த்தம். அதனால் தொடர்ந்து இது போன்ற பெயர் மாற்றங்களை விட்டுவிட்டு, நிச்சயம் ஒரு நல்லபடியாக வழியில் இந்த நாட்டை வழிநடத்துங்க.
இவங்க பாருங்க எத்தனையோ பெயர் இருக்கு. இந்தியா என்ற பெயரில் ஒரு கூட்டணி அவசியமா ? ஒரு நாட்டின் பெயரில் ஒரு கூட்டணி வைப்பது முதலில் தவறு. அதே மாதிரி பிஜேபி இன்னைக்கு இந்தியாவை பாரத் என்று சொல்வதும் தவறு. இரண்டு பொலிட்டிக்கல் பார்ட்டிகளுமே மக்களையும், நாட்டையும் குழப்புகின்ற செயலைத்தான் செய்கிறார்களே ஒழிய, இது நாட்டுக்கு, மக்களுக்கும் எந்த விதத்திலும் பலன் அளிக்காது என்பது எங்கள் கருத்து.
தேமுதிக நிலைப்பாடு என்ன என்பதை ? தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலங்கள் இருக்கிறது. அதனால் செயற்குழு – பொதுக்குழு நடக்க இருக்கிறது. அது முடிந்து ஜனவரி முதல் வாரத்திலேயே அல்லது பொங்கலுக்கு அடிதோ யாருடன் கூட்டணி ? எந்த தொகுதி ? எத்தனை தொகுதி ? யார் வேட்பாளர் ? என்பதை தலைமைக் கழகம் கேப்டன் அவர்கள் நிச்சயம் அறிவிப்பார், அதுதான் எங்களுடைய இறுதி முடிவு என தெரிவித்தார்.