ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபாகரன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.